கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பி வீடியோ வெளியிட்டவர் மதுரையில் கைது..!

கொரோனா வைரஸ் தொடர்பாக மதுரையில் வதந்தி பரப்பி வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் இராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில், கொரோனா வைரஸ் பாதித்த 47 பேரை...

கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பி வீடியோ வெளியிட்டவர் மதுரையில் கைது..!
கொரோனா வைரஸ் தொடர்பாக மதுரையில் வதந்தி பரப்பி வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் இராஜாக்கூர் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில், கொரோனா வைரஸ் பாதித்த 47 பேரை தங்க வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும், அதனை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவதாகவும் சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது. முகக்கவசங்கள் அணிவதை விட கை கழுவுதல் தான் சிறந்த வழி - உலக சுகாதார நிறுவன அதிகாரி  இந்த வதந்தியை பரப்பி வீடியோ வெளியிட்ட நபர் செல்வம் என்பது ஒத்தக்கடை போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை புதுதாமரைப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த செல்வத்தை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு இல்லை.. ஆனாலும் தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி..!  கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்த நிலையில், இதுதொடர்பாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரை தனிப்படை காவல்துறை கைது செய்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.