கொரோனா நிதிக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் ஒரு மாத ஊதியம் - அதிமுக அறிவிப்பு

கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் கொரோனா நிவாரண நிதி தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்...

கொரோனா நிதிக்கு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் ஒரு மாத ஊதியம் - அதிமுக அறிவிப்பு
கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் கொரோனா நிவாரண நிதி தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள்., எம்.எல்.ஏக்கள் தங்கள் மார்ச் மாத ஊதியத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக எம்.பிக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயும், எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது. "மளிகைக் கடைகள் நாள் முழுவதும் திறந்திருக்கலாம்" தமிழக அரசு அறிவிப்பு