கொரோனா நோயாளிகளுக்கு இடமளியுங்கள் - மக்களிடம் சென்னை மாநகராட்சி கோரிக்கை

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இடம் அளித்து உதவ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உதவி கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் 694 பேரை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை...

கொரோனா நோயாளிகளுக்கு இடமளியுங்கள் - மக்களிடம் சென்னை மாநகராட்சி கோரிக்கை
கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இடம் அளித்து உதவ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உதவி கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் இதுவரை இந்தியாவில் 694 பேரை பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த இந்த வைரஸால் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க இடம் அளித்து உதவ வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உதவி கோரியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்துள்ள கோரிக்கையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க அதிகமான இடங்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே பயன்படுத்தாத வீடுகள், விடுதிகள் இருந்தால் மாநகராட்சிக்கு தற்காலிகமாக கொடுத்து உதவலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் 25% படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. "மளிகைக் கடைகள் நாள் முழுவதும் திறந்திருக்கலாம்" தமிழக அரசு அறிவிப்பு