கொரோனா, பறவைக்காய்ச்சல் வதந்தி : கோழி இறைச்சி விலை ரூ.40 ஆக சரிவு

மதுரையில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் வதந்தியால், இறைச்சி கோழிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், கோழி இறைச்சி குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் வியாபாரம் பெரிதும்...

கொரோனா, பறவைக்காய்ச்சல் வதந்தி : கோழி இறைச்சி விலை ரூ.40 ஆக சரிவு
மதுரையில் கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் வதந்தியால், இறைச்சி கோழிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், கோழி இறைச்சி குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட இறைச்சி கோழி விற்பனையாளர்கள், மேலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை சந்தித்தனர். அத்துடன் வதந்திகள் குறித்து முறையிட்டும், விளக்கமும் பெற்று வந்தனர். இந்நிலையில், கொரோனா வதந்தியுடன் தற்போது கேரளா மாநிலத்தில் இருந்து வந்த இறைச்சி கோழிகளில் பறவை காய்ச்சல் உள்ளதாக பரவும் வதந்தியால், இறைச்சி கோழி விற்பனை பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இறைச்சி கோழி உயிருடன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், சுத்தம் செய்யப்பட்ட உயிரற்ற இறைச்சிக் கோழி 120 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம் விலை இவ்வளவு மலிவாக குறைந்த போதிலும், போதிய விற்பனை இல்லை எனவும் கறிக்கோழி விற்பனையாளர்கள் வருந்துகின்றனர். மேலும், தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பரவும் கொரோனா.. மேலும் 6 பேருக்கு பாதிப்பு