கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்..!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது...

கொரோனா விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்..!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், உலகமெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை தாக்கி தமிழகத்தில் வந்துள்ளது. வருமுன் காப்போம். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, வயிற்று வலி, உடல் சோர்வு உள்ளவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ளுங்கள். கொரோனா அச்சம் தவிர்ப்போம்!வைரஸ் வருமுன் காப்போம்! #covidindia #Coronaindia pic.twitter.com/NIpInfqzUL — M.K.Stalin (@mkstalin) March 17, 2020 திமுக சார்பில் நடத்தப்பட இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள கழகத்தினர் நோயால் பாதிக்கப்படுவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க உதவி செய்யுங்கள். முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளை‌ மூடியது வரவேற்கத்தக்கது. பீதியை கிளப்பக்கூடாது. அதே சமயத்தில் உண்மையை மறைக்கக்கூடாது. முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளை‌ மூடியது வரவேற்கத்தக்கது” என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக நேற்று சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் செயல்படும் தமிழக அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.