கொரோனா விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் சித்தார்த்!

கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தியாக உள்ளது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை...

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் சித்தார்த்!
கொரோனாவை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தியாக உள்ளது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா வைரஸ் நம் உடலில் வருவது தெரியாது. நாம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும். யாரிடமும் நெருக்கமாக பழக வேண்டாம். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு கை கொடுத்தல், கட்டி பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் இன்னும் கொரோனா பரவவில்லை. அரசு முடிந்தவரை கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசின் நடவடிக்கை திருப்தியாக உள்ளது. அண்டை நாடுகளுடனான இந்திய எல்லைப்பகுதிகள் ஏப்.15வரை மூடல் தமிழகம் மற்றும் இந்தியாவை கொரோனா கடந்து செல்ல இறைவனை வேண்டுவோம். கூடிய விரைவில் நாம் பழைய நிலைக்கு திரும்புவோம்” எனத் தெரிவித்தார்.