குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி முறைகேடு பூதாகரமான நிலையில், குரூப்-4 தேர்வில் கலந்துகொண்டவர்களின் பட்டியல்...

குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு தேதி அறிவிப்பு
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி முறைகேடு பூதாகரமான நிலையில், குரூப்-4 தேர்வில் கலந்துகொண்டவர்களின் பட்டியல் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்மூலம், தேர்வில் முறைகேடாக இடம்பிடித்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில் கலந்தாய்விற்கான அறிவிப்பைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்றும், கலந்தாய்வுக்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது எனவும் டி.என்.பி.எஸ்.சி திட்டவட்டமாக கூறியுள்ளது. ‌ கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் தற்காலிக பட்டியல் டி.என்.பி.எஸ்.சி‌ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே குரூப் 4, குரூப் 2ஏ, வி.ஏ.ஓ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “ஸ்டான்லி மருத்துவமனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” - டீன் தகவல்