கல்லூரித் தேர்வுகள் எப்போது?: உயர் கல்வித்துறை விளக்கம்

வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனா எப்படி பரவுகிறது? -மாணவர்களின் வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில்...

கல்லூரித் தேர்வுகள் எப்போது?: உயர் கல்வித்துறை விளக்கம்
வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனா எப்படி பரவுகிறது? -மாணவர்களின் வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறும்போது “ இந்த ஆண்டிற்கான தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை; தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், கல்லூரிகள் வரும் ஜீன் மாதத்தில் தான் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.