சூட்கேஸ் ரோபோ

நன்றி குங்குமம் முத்தாரம் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் டெலிவரிக்காக  ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் கூட அமேசான் நிறுவனம் டெலிவரி ரோபோவை சோதனையோட்டம் செய்தது. இப்படியிருக்க ரஷ்யாவின் இணைய வணிக தளமான ‘யான்டெக்ஸ்’...

சூட்கேஸ் ரோபோ

நன்றி குங்குமம் முத்தாரம் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் டெலிவரிக்காக  ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் கூட அமேசான் நிறுவனம் டெலிவரி ரோபோவை சோதனையோட்டம் செய்தது. இப்படியிருக்க ரஷ்யாவின் இணைய வணிக தளமான ‘யான்டெக்ஸ்’ நிறுவனமும்  ‘யான்டெக்ஸ் ரோவர்’ என்ற பெயரில் ஒரு டெலிவரி ரோபோவை மாஸ்கோ நகரில் முன்னோட்டம் பார்த்திருக்கிறது. ஒரு சூட்கேஸ் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த ரோபோ. யாருடைய துணையும் இன்றி தன்னைத் தானே செலுத்தி, சாலைகளில் பயணித்து, யான்டெக்ஸ் வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கே பொருட்களை கொண்டுபோய் தந்துவிடுமாம். அதே நேரத்தில் எங்கு புறப்பட்டதோ அங்கேயே திரும்பியும் வந்துவிடும். சாலையில் போகும்போது எதன் மீதும் மோதாமல் செல்ல இதில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூகுளின் தானியங்கி காரைப் போன்று இந்த ரோபோ செயல்படுகிறது. விரைவில் ரஷ்யாவின் வீதிகளில் யான்டெக்ஸ் ரோவரைப் பார்க்க முடியும்.