சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடி - மணமகனை தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச்சென்ற கும்பல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியரைத் தாக்கிவிட்டு மணமகள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி இரு‌வரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது...

சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடி - மணமகனை தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச்சென்ற கும்பல்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியரைத் தாக்கிவிட்டு மணமகள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி இரு‌வரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காத‌ல் வசப்பட்டனர். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு கடந்த திங்களன்று கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் இளமதியை செல்வன் திருமணம் செய்து கொண்டார். இரவு 9 மணி அளவில் ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 40க்கும் அதிகமானோர், திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழி எங்கும் ஈஸ்வரனை துன்புறுத்தி புதுமணத்தம்பதியின் இருப்பிடத்தை கேட்டுள்ளனர். அப்போது உக்கம்பருத்திக்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் புதுமணத்தம்பதி சென்றதை பார்த்த அந்த கும்பல், புதுமாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியை கடத்திச்சென்றுள்ளனர். சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள இந்த சம்பவத்தில், இளமதியும், செல்வன் மற்றும் ஈஸ்வரனும் தனித்தனி காரில் கடத்தப்பட்டது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கருங்கல்லூர் வழியாக வந்த ஆம்னிவேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, பெண்ணின் தந்தை ஜெகநாதன் ஆம்னி வேனில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரும் வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்தது. இதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் மீட்டனர். ட்ரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? - விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை கடத்தப்பட்ட புதுமணப்பெண் இளமதியை மீட்க வலியுறுத்தியும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நள்ளிரவு கொளத்தூர் காவல்நிலையத்தை திராவிட விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர். மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் காவல் நிலையத்தில் வலியுறுத்தப்பட்டது.