சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது...

சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 649 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.  “இங்கிருந்தால் பசியால் இறந்து விடுவோம்” - டெல்லியை விட்டு வெளியேறும் கூலித்தொழிலாளர்கள்.! இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மட்டுமல்லமால் சந்தேகத்திற்குரிய வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில் ட்ரோன் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் இயங்கக்கூடிய இந்த ட்ரோன் மூலம், சென்னை மாநகராட்சி கட்டடத்தில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில் எளிமையாக நடைபெற்று முடிந்த திருமணம் இதை மேற்பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறும்போது “ சென்னையில், 22 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு முகாம்களில் 2 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ட்ரோன்கள் மூலம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைகள், குடிசை மாற்றுவாரிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்று கூறினார்.