செவிலியர் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழப்பு?: உறவினர்கள் போராட்டம்

  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழந்து விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடு ஆண்டான் தெருவை சேர்ந்தவர் சந்திரபோஸ் என்பவரின் மனைவி...

செவிலியர் பிரசவம் பார்த்ததால் பெண் உயிரிழப்பு?: உறவினர்கள் போராட்டம்
  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழந்து விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடு ஆண்டான் தெருவை சேர்ந்தவர் சந்திரபோஸ் என்பவரின் மனைவி தமிழரசி. இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால், பணியில் இருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. பிரசவத்தில் தமிழரசிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கொரோனா அச்சம்: மலேசியாவில் இருந்து இந்தியா வர தடை இந்நிலையில் குழந்தைப் பிறப்புக்கு பிறகு தமிழரசிக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததால் அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தமிழரசி உயிரிழந்துள்ளார். கொரோனா அச்சம்: மலேசியாவில் இருந்து இந்தியா வர தடை இதனையடுத்து செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே தமிழரசி உயிரிழந்துவிட்டார் என்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி நீக்கம் செய்வதோடு மருத்துவதுறை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கறம்பக்குடி வட்டாட்சியர் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.