“ஜூம் ஆப் காணொலி பயன்பாடு பாதுகாப்பானதல்ல” - உள்துறை அமைச்சகம் 

ஜூம் தனிநபர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.   நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு உயர் அதிகாரிகள் பலர் இருந்த இடத்திலிருந்தே காணொலி காட்சி மூலம்...

“ஜூம் ஆப் காணொலி பயன்பாடு பாதுகாப்பானதல்ல” - உள்துறை அமைச்சகம் 
ஜூம் தனிநபர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.   நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு உயர் அதிகாரிகள் பலர் இருந்த இடத்திலிருந்தே காணொலி காட்சி மூலம் தங்களின் கலந்துரையாடல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதற்காக ஜூம் ஆப் போன்ற வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.  அதனைக் கொண்டே அரசு நிர்வாகம் தற்போது இயங்கி வருகிறது.     இந்நிலையில் அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள   ஜூம் ஆப் வீடியோ கான்ஃபெரன்சிங் பயன்பாடு, தனி நபர்களின் பயன்பாட்டிற்கு "பாதுகாப்பானது அல்ல" என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.  தேசிய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி மற்றும் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியா (சிஇஆர்டி-இன்) ஆகிய  அரசு சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய  பிரபலமான ஜூம் ஆப்-ஐ  பயன்படுத்தி வருகின்றனர்.    வெட்டவெளியில் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் - வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்     ஆகவே அதனை மூன்றாம் தனிநபர்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது பாதுகாப்பற்றது எனக் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சைபர் ஒருங்கிணைப்பு மையம் அல்லது சைகார்ட்  வெளியிட்டுள்ள  அறிவுறுத்தலின்படி  இது தனி நபர்களுக்கானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சைகார்ட் என்பது சைபர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் சட்ட அமலாக்க நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியினால் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது.    (கோப்பு புகைப்படம்)   மேலும் ஜூம் ஆப் பயன்படுத்தும் தனியார் நபர்களை உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஜூம் ஆப்-ஐ பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துவதால் சைபர் தாக்குதல்களுக்கு  ஆளாகக் கூடும். மேலும் உங்களது நிறுவனம் சார்ந்த ஆவணங்கள் களவாடக் கூடும் என்றும் சி.இ.ஆர்.டி-இன் எச்சரித்துள்ளது. ஹேக்கர்கள் இதனை ஒரு டாஸ்க் போல செய்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.    ஆயுர்வேத மருத்துவமனையின் கழிவறைக்குள் புகுந்த சிறுத்தை..!