டெக் புதுசு

நன்றி குங்குமம் முத்தாரம் 4k மானிட்டர்ஸ்மார்ட்போன், டேப்லெட் வந்தபிறகு கம்ப்யூட்டர் மானிட்டரின் தேவை குறைந்துவிட்டது. ஏதாவது ஸ்பெஷலாக செய்தால் மட்டுமே சந்தையில் ஒரு  இடத்தைப் பிடிக்க முடியும். இந்நிலையில் ‘சாம்சங்’ நிறுவனம் 4k தரத்தில்...

டெக் புதுசு

நன்றி குங்குமம் முத்தாரம் 4k மானிட்டர்ஸ்மார்ட்போன், டேப்லெட் வந்தபிறகு கம்ப்யூட்டர் மானிட்டரின் தேவை குறைந்துவிட்டது. ஏதாவது ஸ்பெஷலாக செய்தால் மட்டுமே சந்தையில் ஒரு  இடத்தைப் பிடிக்க முடியும். இந்நிலையில் ‘சாம்சங்’ நிறுவனம் 4k தரத்தில் அல்ட்ரா ஹெச்.டி மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. 3840 x 2160 பிக்ஸல் ரெசல்யூசன், ஃப்ரேம்லெஸ் டிசைன், மானிட்டரை அப்படியும் இப்படியும் என்று நமது தேவைக்குத் தகுந்த மாதிரி அட்ஜெஸ்  செய்துகொள்ள முடியும். விலை சுமார் ரூ. 25 ஆயிரம்.கண்காணிப்பு கேமராசெல்லப்பிராணிகளின் காதலர்களுக்காக பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்ட கேமரா இது. 1080 பிக்ஸல் தரத்தில் இரவு பகல் பாராது வீடியோக்களை  இது பதிவு செய்யும். 160 டிகிரி வைடு ஆங்கிள் கோணத்தில் உங்களின் செல்ல நாயைக் கண்காணித்து ஸ்மார்ட்போனுக்குத் தகவல் அனுப்பும்.  இதிலிருக்கும் சென்சார் உங்களின் நாய் எப் போது குரைக்கும் என்பதைக் கூட கண்டுபிடித்துச் சொல்கிறது.