டாடா கிராவிட்டாஸ்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எம்.ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களால் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹாரியர் அடிப்படையில் 7 சீட்டர் மாடலாக டாடா கிராவிட்டாஸ் என்ற எஸ்யூவி ரக...

டாடா கிராவிட்டாஸ்

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், எம்.ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களால் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹாரியர் அடிப்படையில் 7 சீட்டர் மாடலாக டாடா கிராவிட்டாஸ் என்ற எஸ்யூவி ரக கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இப்புதிய மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. இது, 7 சீட்டர் மாடலாக வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது. இப்புதிய கார், வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஒமேகா பிளாட்பார்மில் இந்த கார் உருவாக்கப்படுகிறது.இந்த கார், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட், 17 அங்குல அலாய் வீல், எல்இடி டெயில் லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. டாடா ஹாரியர் மாடலில் இருந்து இதன் பின்புற அமைப்பு வேறுபடுத்துகிறது. 8.8 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 9 ஸ்பீக்கர்களுடன்கூடிய ஆடியோ சிஸ்டம், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, அட்ஜெஸ்ட் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. நடுவரிசையில் கேப்டன் எனப்படும் வசதியான இரண்டு தனி இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரின் பின்வரிசை இருக்கையை மடக்கி, பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. டாடா ஹாரியர் காரில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்தான் இந்த காரிலும் இடம்பெறுகிறது. இந்த டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. 16 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.