டிரைவர் இல்லாத கார்!

நன்றி குங்குமம் முத்தாரம் ஹாலிவுட் படங்களிலும், சயின்ஸ் ஃபிக்சன் நாவல்களிலும் இடம்பெறும் ஆச்சர்யமான  விசயம் டிரைவர் இல்லாத கார். ரோபோ கார், தானோட்டி கார் என பல பெயர்களிலும் இந்தக் கார் அழைக்கப்படுகிறது.  திரைப்படத்தில் சாத்தியமான...

டிரைவர் இல்லாத கார்!

நன்றி குங்குமம் முத்தாரம் ஹாலிவுட் படங்களிலும், சயின்ஸ் ஃபிக்சன் நாவல்களிலும் இடம்பெறும் ஆச்சர்யமான  விசயம் டிரைவர் இல்லாத கார். ரோபோ கார், தானோட்டி கார் என பல பெயர்களிலும் இந்தக் கார் அழைக்கப்படுகிறது.  திரைப்படத்தில் சாத்தியமான டிரைவர் இல்லாத காரை நிஜத்திலும் கொண்டுவர பல நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் காருக்கான ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். பலர் படுகாயம் அடைகின்றனர்.இந்த விபத்துகளைத் தடுப்பதே டிரைவர் இல்லாத காரின் முக்கிய நோக்கம். சமீபத்தில் ‘கூகுள்’, ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனங்கள் டிரைவர் இல்லாத காரை உருவாக்கி முன்னோட்டம் விட்டிருந்தன. இந்த முன்னோட்டம் தோல்வி யடைந்து இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். இதனால் இந்தக் கார்களைக் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இக்கார்களுக்கு உரிய சாலை விதிகளை உருவாக்கி வருகிறது ஒரு அமைப்பு. அதன்படி டிரைவர் இல்லாத கார் அலட்சியமாக இயங்குவதை தவிர்க்க வேண்டும். முரட்டுத்தனமாக செல்லக்கூடாது.நூறு சதவீதம் மோதலைத் தவிர்க்க வேண்டும். மனிதனைவிட விவேகமாக வாகனத்தை ஓட்டும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு இருக்க வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கார் வடிவமைக்கப்பட வேண்டும். இன்னும் இரண்டு வருடங்களில் டிரைவர் இல்லாத கார் விற்பனைக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதற்குள் டிரைவர் இல்லாத காரில் உள்ள குறைகளை எல்லாம் நிறுவனங்கள் சரி செய்ய வேண்டும்.தொகுப்பு: க.கதிரவன்