தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னை : காதலனை கொலை செய்த பெண்

தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, காதலனை பெண் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி நந்தவன தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத் தோட்டம் ஒன்று உள்ளது....

தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னை : காதலனை கொலை செய்த பெண்
தகாத உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, காதலனை பெண் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி நந்தவன தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத் தோட்டம் ஒன்று உள்ளது. இவரிடம் கார் டிரைவராக கேரளா மாநிலம் பியல்ராவை சேர்ந்த ராஜா(31) என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். 3 வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் வளர்மதிக்கு, கார் டிரைவர் ராஜாவுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில நாட்களுக்கு முன்பு வளர்மதியை ராஜா கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. கொரோனா மருந்தை இன்று முதல் பரிசோதிக்கிறது அமெரிக்கா!! இந்நிலையில் சமாதானமாக போவோம் எனக் கூறி ராஜாவை, வளர்மதி போடிக்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த ராஜாவை மிளகாய் பொடியை முகத்தில் தூவி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வளர்மதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘தலைவர் தலைமையில் அரசியல் புரட்சிக்கு ஒன்றிணைவோம்’- மதுரையில் ஒட்டப்பட்ட சுவெராட்டிகள்..! இதனிடையே ராஜாவை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த வளர்மதி அக்கம்பக்கத்தினரிடம் தான் கொலை செய்துவிட்டதாகவும் காவல்துறையினரை வரவழைக்க வேண்டும் எனவும் கூறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.