தண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்!

நன்றி குங்குமம் முத்தாரம் உலகை அச்சுற்றுத்தும் முக்கிய பிரச்சனைகளில்  ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. வருங்காலங்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் போதுமான தண்ணீர்  கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதனால் எல்லா வழிகளிலும் தண்ணீரைச் சேமிக்கும் தொழில்நுட்பத்தைக்...

தண்ணீரைச் சேமிக்கும் புது தொழில்நுட்பம்!

நன்றி குங்குமம் முத்தாரம் உலகை அச்சுற்றுத்தும் முக்கிய பிரச்சனைகளில்  ஒன்று தண்ணீர் பற்றாக்குறை. வருங்காலங்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் போதுமான தண்ணீர்  கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதனால் எல்லா வழிகளிலும் தண்ணீரைச் சேமிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த வகையில் ஷவரில் குளிக்கும்போது வீணாகும் தண்ணீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்று சுவீடனின் ‘ஆல்ட்டர்ட்’ நிறுவனம் ஆராய்ச்சி செய்து வந்தது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்கணும். அதே நேரத்தில் ஷவரில் குளிக்கும் முழு அனுபத்தையும் தர வேண்டும் என்பது இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். இதற்காக ஒரு புதிய ஷவர் கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஷவர் கருவி 75 சதவீத நீரைச் சேமிக்கிறது. ஷவரில் இருந்து வெளியாகும்  நீர்த் திவலைகள் உடல் முழுவதையும் கச்சிதமாக  நனைக்கிறது. பரவலாக நீரைத் தெளித்து முழுமையாக குளிக்கும் அனுபவத்தைத் தருகிறது.  நீரை சூடேற்றும் வசதியும் இருக்கிறது. இதை எந்த குளியலறை ஷவர் குழாயிலும் இணைக்க முடியும்.தொகுப்பு: க.கதிரவன்