தன்னை சந்திக்க வரவேண்டாம்: அறிவிப்பு பலகை வைத்த தமிழக அமைச்சர்!!

தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த...

தன்னை சந்திக்க வரவேண்டாம்: அறிவிப்பு பலகை வைத்த தமிழக அமைச்சர்!!
தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.‌ மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 64 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே கர்நாடகா, டெல்லியில் இருவர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு 3ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 3 பேரும் 60 வயதை தாண்டியவர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் அதிகப்பட்சமாக 39 பேருக்கும், கேரளாவில் 26 பேருக்கும், ஹரியானாவில் 15 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 11 பேருக்கும், டெல்லியில் 8 பேருக்கும், லடாக்கில் 6 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசும் கொரோனாவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தனது வீட்டின் முகப்பில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளார். அதில், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தன்னை வீட்டிலோ அல்லது சென்னையிலோ சந்திக்க வரவேண்டாம் என எழுதப்பட்டுள்ளது. இதனால் அமைச்சரை சந்திக்க வருபவர்கள் தோட்டத்து வீட்டின் முகப்பு வாசலுடன் திரும்பிச் செல்கின்றனர். கொரோனா எதிரொலி: மணமக்கள் உள்பட எல்லோருக்கும் மாஸ்க்..!