தனியாக வசித்த தாத்தா, பாட்டி, பேரன் : கத்தியைக் காட்டி கொள்ளையடித்த கும்பல்

செங்கல்பட்டில் தனியாக வசித்து வந்த தாத்தா, பாட்டி, பேரனை கத்தி முனையில் மிரட்டி 25 சவரன் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகேயுள்ள சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற கருவூல அலுவலர் தேளியப்பன்....

தனியாக வசித்த தாத்தா, பாட்டி, பேரன் : கத்தியைக் காட்டி கொள்ளையடித்த கும்பல்
செங்கல்பட்டில் தனியாக வசித்து வந்த தாத்தா, பாட்டி, பேரனை கத்தி முனையில் மிரட்டி 25 சவரன் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகேயுள்ள சின்ன செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற கருவூல அலுவலர் தேளியப்பன். இவரது மனைவி செல்வராணி. இவர்கள் இருவரும் தங்கள் பேரனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், தேளியப்பனை கத்தி முனையில் மடக்கி பிடித்தனர். பின்னர் செல்வராணி மற்றும் சிறுவனையும் மிரட்டிய அந்தக் கும்பல், வீட்டிலிருந்த 25 சவரன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து தேளியப்பன் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டினுள் புகுந்த கொள்ளைக் கும்பல் நன்கு பழகிய வீடுபோல, தனது வீட்டினுள் உள்ள அனைத்து அறைகளையும் வேகமாக திறந்து கொள்ளையடித்துச் சென்றதாக தேளியப்பன் தெரிவித்தார். அத்துடன் அந்த கும்பல் உடல் முழுவதும் எண்ணெய் பூசி, முகமூடி அணிந்துகொண்டு, கைரேகை பதியாத வகையில் கையுறைகள் அணிந்துகொண்டு வந்ததாகவும் தேளியப்பன் கூறியுள்ளார். அவர் கூறிய அடையாளங்களைக் கொண்டு போலீசார் கொள்ளைக்கும்பலை தேடி வருகின்றனர். கொரோனா கண்காணிப்பிலிருந்து தப்பித்து விபத்தில் சிக்கிய நபர்.. உதவிய 40 பேருக்கு பாதிப்பு?