தாம்பரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை

சென்னையில் 11-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த மாந்தோப்பு தங்கவேலு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பொன்னுரங்கம்(50). இவருடையமகன் பாலாஜி(17). அரசு...

தாம்பரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை
சென்னையில் 11-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் அடுத்த மாந்தோப்பு தங்கவேலு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பொன்னுரங்கம்(50). இவருடையமகன் பாலாஜி(17). அரசு பள்ளி ஒன்றில் பதினொன்றாம் வகுப்பு படித்து வாந்தார். “என் தாயை தப்பாக பேசினார் விஷால்; அவருக்கு ஆப்பு காத்திருக்கிறது”- மிஸ்கின் காட்டம் இந்நிலையில், நேற்று பாலாஜியின் பெற்றோர் வல்லக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பொன்னுரங்கம் பாலாஜியின் அறைக்கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பதை பார்த்து கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரம் திறக்காததால் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது பாலாஜி தனது அறையில் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைக்கண்ட பொன்னுரங்கம் அதிர்ச்சிஅடைந்தார்.பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. “2021‌‌ தேர்தலில் மாற்றம் நிகழப்போவது உறுதி” - பிரேமலதா விஜயகாந்த் தகவலறிந்து வந்த போலீசார் பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.