“தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நபர் குணமடைந்தார்” - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்தார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த...

“தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருந்த நபர் குணமடைந்தார்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்தார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார். ரத்த மாதிரியை மீண்டும் பரிசோதித்ததில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது; அரசு சார்பில் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கப்பட்டதால் குணமடைந்தார்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ஓமனிலிருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும், அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து ‌தமிழகம் வந்த 15 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை உறுதி செய்தது. ‘கூட்டம் வேண்டாம்’.. கொரோனா அச்சத்தால் மாறிப்போன மாஸ்டர் இசைவெளியீட்டு விழா