தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா : சென்னை மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள்...

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா : சென்னை மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்த காஞ்சிபுரத்தை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு, பின்னர் சிகிச்சை மூலம் குணமடைந்தார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் இருந்தவர்களை பரிசோதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் எனக்கூறி மாட்டு சிறுநீர் விற்றவர் கைது..!