தூரிகை ட்ரோன்

நன்றி குங்குமம் முத்தாரம் ட்ரோன் மூலம் ஓவியம் வரைய முடியுமா? ‘முடியும்’ என்று சொன்னதோடு அதை நிருபித்தும் கட்டினார் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் காட்சு. சமீபத்தில் அவர் பிரமாண்டமான சுவர்கள், பதாகைகளில் ஓவியம் வரைய உறுதுணையாக இருக்கும் ட்ரோனைக்...

தூரிகை ட்ரோன்

நன்றி குங்குமம் முத்தாரம் ட்ரோன் மூலம் ஓவியம் வரைய முடியுமா? ‘முடியும்’ என்று சொன்னதோடு அதை நிருபித்தும் கட்டினார் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் காட்சு. சமீபத்தில் அவர் பிரமாண்டமான சுவர்கள், பதாகைகளில் ஓவியம் வரைய உறுதுணையாக இருக்கும் ட்ரோனைக் கண்டுபிடித்துள்ளார். பெயிண்ட் பாக்ஸை இந்த ட்ரோனில் அழகாக பொருத்திக்கொள்ள முடியும்.  ஒருமுறை ட்ரோனை சார்ஜ் செய்துவிட்டால் போதும், பத்து நிமிடங்களுக்கு ட்ரோன் இடைவிடாமல் பறக்கும். சுவரில் மோதாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தி பெயிண்டை ஸ்பிரே செய்வதற்கு கன்ட்ரோல் வசதியும் இருக்கிறது. இது ஓவியருக்குப் பக்க பலமாக இருக்கிறது. பல அடுக்குமாடி கட்டடங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு, உயிரைப் பணயம் வைத்து ஓவியம் வரைபவர்களுக்கு இந்த ட்ரோன் ஒரு மாற்றாக இருக்கும். இதன் விலை சுமார் ரூ. 2 லட்சம்.தொகுப்பு: க.கதிரவன்