திருமணத்தை மீறிய உறவு வைத்த கணவர்... கட்டிலோடு எரித்துக் கொன்ற மனைவி மற்றும் மகள்..!

திருமணத்தை மீறிய காதல் கொண்ட நபரை, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவியும் மகளும் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் வீட்டின் வெளியே...

திருமணத்தை மீறிய உறவு வைத்த கணவர்... கட்டிலோடு எரித்துக் கொன்ற மனைவி மற்றும் மகள்..!
திருமணத்தை மீறிய காதல் கொண்ட நபரை, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவியும் மகளும் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல்லை அடுத்த புதன்சந்தையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமி, கட்டிலோடு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது தன் மனைவியும், மகளும் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கந்தசாமி மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார். இதுதொடர்பான காவல்துறையினர் விசாரணையில், கந்தசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய காதல் இருந்ததும், அந்த பெண்ணுக்கு சொத்துகளை எழுதி வைக்க இருந்ததும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அங்கம்மாள், அவரின் தாய் எல்லம்மாள் மற்றும் மகள் சாந்தியின் துணையோடு, கந்தசாமிக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். பின்னர் அவரை வீட்டின் வெளியே கட்டிலில் படுக்க வைத்து, மூவரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடத்தப்பட்ட இளமதிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திமுக எம்.பி