திருவாரூர்: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருவாரூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக கூறி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா...

திருவாரூர்: தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியில் சுற்றியதாக கூறி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 605 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 144 தடை உத்தரவையும் மீறி மருத்துவக்குழுவினர் அறிவுரையை தவிர்த்து வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேர் வெளியில் நடமாடியுள்ளனர். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வெளியில் நடமாடிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா ஏன் ஆபத்தானது..? சந்தேகங்களும்... விளக்கங்களும்..!