திருவாரூர்: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை..!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த 24-ஆம் தேதி தப்லீக் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற்றது....

திருவாரூர்: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை..!
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த 24-ஆம் தேதி தப்லீக் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட  சில நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நோய் பரவும் 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு இதனையடுத்து  மாநாட்டில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று முதற்கட்டமாக 26 நபர்களுக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. அதேபோல முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 4 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கொரோனா பற்றிய தகவல் அறியாமல் பணியாற்றும் விவசாயிகள் இந்த மாநாட்டில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் மாநாட்டில் பங்கேற்று விட்டு சுற்றுலா செல்வதற்காக திருவாரூர் வருகை தந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தற்போது அவர்களும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் நாட்டில் இருந்து எதற்காக திருவாரூர் வந்தார்கள், எத்தனை நாட்களாக இங்கு தங்கி இருந்தார்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.