திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

  கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை...

திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
  கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை இதுவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அண்மையில் கொரோனா பாதிப்பிற்கு கர்நாடாகவை சேர்ந்த முதியவர் ஒருவர் பலியானார். இதனால் மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கொரோனா விழிப்புணர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எல்.கே.ஜி முதல் 5-ஆம் வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார். இதனிடையே தமிழகத்தில் இயங்கிவரும் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டி! அடுத்த பொருளாளர் யார்..? ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் கொரோனா..? எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்..! இந்நிலையில் திருவாரூரில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு தேவையான இணை உணவு மற்றும் மதிய உணவை குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கேரளாவில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு அவ்வரசு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.