நடைபயிற்சியின் போது பெண்ணிடம் செயின் பறிப்பு : வாகன சோதனையில் சிக்கிய திருடன்

செயின் பறிப்பில் ஈடுப்பட்டவரை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். சென்னை பள்ளிகரணை ஜெயச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி (51). கடந்த 3 ஆம் தேதி மாலை அவர் வீட்டு அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்....

நடைபயிற்சியின் போது பெண்ணிடம் செயின் பறிப்பு : வாகன சோதனையில் சிக்கிய திருடன்
செயின் பறிப்பில் ஈடுப்பட்டவரை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து 5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். சென்னை பள்ளிகரணை ஜெயச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மி (51). கடந்த 3 ஆம் தேதி மாலை அவர் வீட்டு அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்பொழுது இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் ஷாம் வின்சன்ட், லக்ஷ்மியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் ஒருவர் அதிவேகமாக செல்வது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய வாகன பதிவு எண்ணை கொண்டு குற்றவாளியை தேடத் தொடங்கினர். இந்நிலையில், சித்தாலப்பாக்கம் சந்திப்பில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வாகன பதிவு எண்ணை வைத்து இருச்சக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரித்தனர். பிடிபட்டவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரூபன்(26) என்பதும் அவர் தொடர்ந்து பள்ளிகரணை, வேளச்சேரி, மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம் போன்ற பகுதிகளில் நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. ரூபன் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடமிருந்து 5 சவரன் நகையும் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.