நீட் தேர்வு தள்ளிவைப்பா?: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நீட் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக...

நீட் தேர்வு தள்ளிவைப்பா?: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நீட் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு, ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி வெளியானது. இதை மறுத்துள்ள தேசியத் தேர்வு முகமை, தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.   நீட் தேர்வு தொடர்பான தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள தேசியத் தேர்வு முகமை, தேர்வு தொடர்பான தகவல்களுக்கு பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.