‘பைக்’ டேங்கில் பையை வைத்து பயணம் - விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் பை ஒன்றை வைத்து சென்ற கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்தை கோரப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் உள்ள தனியார்...

‘பைக்’ டேங்கில் பையை வைத்து பயணம் - விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு
வேலூரில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் பை ஒன்றை வைத்து சென்ற கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்தை கோரப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் கல்லூரி சென்ற இவர், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தின் டேங்கில் அவர் பை ஒன்றை வைத்திருந்ததாக தெரிகிறது. அப்போது எதிரே அதிகனரக வாகனம் ஒன்றும் வந்துகொண்டிருப்பைக்கண்டு வண்டியின் வேகத்தை அருண் குறைக்க முயன்றிருக்கிறார். ஆனால், முன்னே இருந்த பை பைக்கின் ஹேண்டிலில் மாட்டிக்கொள்ள எதிர்பாராத விதமாக லாரியின் டயருக்கு அடியில் அவர் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல்துறையினர், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உலகை உலுக்கும் கொரோனா... தற்காப்புக்காக எந்த வகை மாஸ்க் அணிய வேண்டும்...?