பட்ஜெட் போன் அறிமுகம்

நன்றி குங்குமம் முத்தாரம் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் தங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்  கிடைக்கிறதா என்று தேடுகிறார்கள். காரணம், அவர்கள் போன் வாங்குவதற்காக ஒதுக்கிய பட்ஜெட். அவர்களின்...

பட்ஜெட் போன் அறிமுகம்

நன்றி குங்குமம் முத்தாரம் இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்குள் தங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போன்  கிடைக்கிறதா என்று தேடுகிறார்கள். காரணம், அவர்கள் போன் வாங்குவதற்காக ஒதுக்கிய பட்ஜெட். அவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு  சில நிறுவனங்கள் பட்ஜெட் போன்களை அறிமுகம் செய்கின்றன. அந்த வகையில் உங்களின் பட்ஜெட் 15 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் நல்ல  சாய்ஸ் ‘ஓப்போ’வின் புது மாடலான ‘ஏ31’(2020). ஐந்து வருடங்களுக்கு முன்பு இதே பெயரில் ஒரு மாடலை அறிமுகம் செய்திருந்தது ஓப்போ.  ஆனால், அதிலிருந்து முற்றிலும் மாறானது இந்தப் புது மாடல்.போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். 6.50 இன்ச்சில் மெகா டிஸ்பிளே பிரமாண்டமாக மிளிர்கிறது. டிஸ்பிளேவைக்  கச்சிதமாக வடிவமைத்துள்ளனர். 4 ஜிபி மற்றும் 6ஜிபி என இரண்டு விதமான ரேம்கள். ரேமின் அளவைப் பொறுத்து விலையும் கொஞ்சம் மாறும். 64  ஜிபி பேசிக் ஸ்டோரேஜ், 128ஜிபி ஸ்டோரேஜும் உண்டு. வேண்டுமானால் எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ள  முடியும். 12 எம்பியில் முதன்மை கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா, 2 எம்பியில் மேக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமராக்கள், 8 எம்பியில்  செல்ஃபி கேமரா,ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க 4230mAh பேட்டரி திறன் என அசத்துகிறது இந்த போன். மார்ச் முதல் வாரத்திலிருந்து இந்தியாவில்  விற்பனைக்குக் கிடைக்கிறது. விலை ரூ.11,490-ரூ.13,880.