பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டாமா ? - ஸ்டாலின்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டாமா ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்...

பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டாமா ? - ஸ்டாலின்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டாமா ? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், நுகர்வோர் பயன் அடையும் வகையில் மத்திய - மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மீதான விலை குறைவு பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவோர், அதன் விலை குறையும் போது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டாமா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக கச்சா எண்ணெய்யின் தேவையைக் காட்டிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதன் விலை ஒரு பீப்பாய் 31 டாலர் வரை கீழே சென்றது. ஆனால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக இறங்கியும் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. சந்தை மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை பெரியளவில் குறையவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். துக்ளக் விழாவில் பெரியார் குறித்த பேச்சு: ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி