புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் சிகிச்சை

புதுச்சேரியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாஹே பள்ளூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது பெண், அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்....

புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் சிகிச்சை
புதுச்சேரியில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாஹே பள்ளூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது பெண், அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கோழிகோடு விமானம் நிலையம் வந்த அவர், அங்கிருந்து மாஹே வந்தார். இதையடுத்து அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால், மாஹே அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகள் கோழிகோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதுகுறித்து மாஹே மருத்துவமனை நிர்வாகம் சார்பிலிருந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த பெண் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தியாவில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் மருத்துவமனைகள் தவிர்த்து மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டு வருகின்றன.