புதுச்சேரியில் 20-ஆம் தேதி முதல் பொம்மலாட்ட விழா.. மன அழுத்தத்தை குறைக்கும் என நம்பிக்கை

  புதுச்சேரியில் மார்ச் 20-ஆம் தேதி முதல் பிரான்ஸ் கலை விழா கொண்டாடப்படுவதையொட்டி மிகப்பெரிய அளவிலான பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொம்மலாட்ட கலையை அழிவிலிருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு...

புதுச்சேரியில் 20-ஆம் தேதி முதல் பொம்மலாட்ட விழா.. மன அழுத்தத்தை குறைக்கும்  என நம்பிக்கை
  புதுச்சேரியில் மார்ச் 20-ஆம் தேதி முதல் பிரான்ஸ் கலை விழா கொண்டாடப்படுவதையொட்டி மிகப்பெரிய அளவிலான பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொம்மலாட்ட கலையை அழிவிலிருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் பொம்மலாட்ட கலை விழா வரும் 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறுகின்றது. இதன் ஒரு பகுதியாக அலையான் பிரான்ஸ் திரைப்படக் குழுவினர் பெரிய அளவிலான பொம்மைகளை தயாரித்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாடகங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 30-க்கும் மேற்பட்ட பிரான்ஸ் மற்றும் இந்திய கலைஞர்கள், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நாடகத் துறை மாணவர்கள் உள்ளிட்டோர் இணைந்து புதுச்சேரியில் பெரியளவிலான பொம்மைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவ அவசர நிலை இல்லை; அச்சம் வேண்டாம்' - மத்திய சுகாதார அமைச்சகம் இந்த பொம்மை வேடமணிந்து, நாடகம் நடத்த பல்வேறு கல்லூரி நாடகத் துறையில் பயிலும் மாணவர்கள் கடந்த இருதினங்களாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இதுபோன்ற பெரியளவிலான பொம்மைகள் மூலம் சமூகத்திற்கு தேவையான நல்ல செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த பொம்மை நாடகங்களின் நோக்கமாக உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்   இந்த நாடகங்கள் புதுச்சேரியில் உள்ள கடற்கரை திடல், கிராம சந்தை திடல், உள்ளிட்ட பெரிய இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ள நாடக குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இது சாதாரண நாடக நிகழ்வு என்பதை கடந்து மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என்பது இவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.