புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் ZTE

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ZTE ஆனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் ZTE Axon 10s Pro எனும் குறித்த கைப்பேசி தொடர்பான சிறப்பம்சங்கள்...

புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யும் ZTE

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ZTE ஆனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் ZTE Axon 10s Pro எனும் குறித்த கைப்பேசி தொடர்பான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 6.47 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள குறித்த கைப்பேசியில் Snapdragon 865 flagship processor உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான நினைவகமாக 6GB அல்லது 12GB RAM, 128GB அல்லது 256GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன. மேலும் அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய குறித்த கைப்பேசியில் 20மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 20 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.