புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்

கடந்த ஆண்டு செப்டம்பரில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இப்புதிய மாடல், மார்ச் 5ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இது, ஆப்ரிக்கா ட்வின் மற்றும் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர்...

புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக்

கடந்த ஆண்டு செப்டம்பரில் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் பைக் பொது பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இப்புதிய மாடல், மார்ச் 5ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இது, ஆப்ரிக்கா ட்வின் மற்றும் ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், கையாளுமை மற்றும் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக மேம்பட்டு இருக்கிறது. இப்புதிய மாடலில் 999 சிசி இன்ஜினுக்கு பதிலாக புதிய 1,084 சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய இன்ஜின் அதிகபட்சமாக 101 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். இந்த இன்ஜின், பல அலுமினிய பாகங்களுடன் இலகுவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்புதிய மாடல், மேனுவல் மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.4 கி.மீ. மைலேஜ், சிவிடி கியர்பாக்ஸ் மாடல் 20.8 கி.மீ. மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பைக்கில், ஹோண்டாவின் செலக்ட்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட், 3 லெவல் எலெக்ட்ரானிக் இன்ஜின் பிரேக்கிங், வீலி கன்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் தொடுதிரையுடன்கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. புளூடூத் இணைப்பு வசதி, ஆப்பிள் கார் ப்ளே செயலியை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன. இந்த பைக்கில், டூர், அர்பன், கிராவல் மற்றும் ஆப் ரோடு என நான்கு விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. தவிர, ஓட்டுபவர் விருப்பத்தின்பேரில் இரண்டு டிரைவிங் மோடுகளையும் செட்டிங் செய்ய முடியும். மேனுவல் மாடல் 226 கிலோ எடையும், சிவிடி மாடல் 236 கிலோ எடையும் கொண்டது ஆகும். இந்த மாடலில் 18.8 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.