‘பீதி அடைய செய்கிறதா கொரோனா காலர் ட்யூன்?’: எப்படி நிறுத்துவது என தேடும் மக்கள்..!

தமிழ்நாட்டில் கொரோனா குறித்த ஒரு அச்சம் ஆரம்பித்திருக்கிறது. முதலில் சீனாவில்தானே இருக்கிறது என நிம்மதி பெருமூச்சு விட்டவர்கள்கூட இப்போது கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கைகளை கழுவுவது தொடங்கி, முகத்திற்கு...

‘பீதி அடைய செய்கிறதா கொரோனா காலர் ட்யூன்?’: எப்படி நிறுத்துவது என தேடும் மக்கள்..!
தமிழ்நாட்டில் கொரோனா குறித்த ஒரு அச்சம் ஆரம்பித்திருக்கிறது. முதலில் சீனாவில்தானே இருக்கிறது என நிம்மதி பெருமூச்சு விட்டவர்கள்கூட இப்போது கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கைகளை கழுவுவது தொடங்கி, முகத்திற்கு முகமூடி அணிவது வரை பல மாற்றங்களை கண்டு வருகிறது தமிழகம். ஆனால், அதிகமான விழிப்புணர்வு இன்னும் உருவாகவில்லை என்றே தெரிகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வை வைத்து பலர் பணம் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கைகளில் ஒட்டிக் கொண்டுள்ள கிருமியை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் sanitation gel விலை சகட்டு மேனிக்கு ஏறி உள்ளது. பலர் 2 ரூபாய்க்கு விற்க வேண்டிய மாஸ்கை 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். டெல்லியில் 500 ரூபாய் வரை சென்றுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். தமிழக அரசு கொரோனா குறித்த விழிப்புணர்வை மிகத் தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசு மேலும் அதிகப்படியான அக்கறையை எடுத்துக் கொண்டு செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கு இடையே சில நாட்களாக யாருக்காவது போன் செய்தால் ஒரே இருமல் சத்தம் கேட்கிறது? அதுவும் ஒலிக்கும் குரல் அசலாக இருமுவதைப் போல உள்ளது. நாம் தொடர்பு கொள்ளும் நபருக்குத்தான் ஏதோ பிரச்னையோ என யோசிக்க வைக்கிறது. சில நொடிகள் கடந்தபின் ‘கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு’ வசனங்களைப் பேசுகிறது. நாம் டயல் செய்த நபருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது அப்புறம்தான் நமக்கே தெரிகிறது. இந்தியாவில் இதுவரை 43 பேருக்கு கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை இதில் வரும் வாசகம் ஒன்று இந்தியில் இருக்கிறது. மற்றொன்று ஆங்கிலத்தில் இருக்கிறது. இது சம்பந்தமாக திமுகவை சார்ந்த கவிஞர் சல்மா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை நோக்கி முதலில் இந்த விளம்பரத்தை தமிழில் ஒலிபரப்ப நடவடிக்கை எடுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கெனவே திரைப்படம் பார்க்க போனால் ‘இவர்தான் முகேஷ்’ என ஒரு கொடுமையான விளம்பரத்தை போடுவார்கள். அதன் பிறகு மனம் அதில்தான் சிக்கித் தவிக்கும். படத்தை ரசிப்பதற்கான மனமே வராது. இதற்குப் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதன் பின் அது நிறுத்தப்பட்டது. இப்போது கொரோனா சத்தம் நமது போனில் ‘லொக்கு லொக்கு’ என இரும்புவது பீதியை கிளப்பியுள்ளது. அதற்கு பல நெட்டிசன்கள் கூகுளில் போய் எப்படி இந்தச் சத்தத்தை நிறுத்துவது என தேடிப் பார்த்துள்ளனர். விழிப்புணர்வு சரி, ஆனால் கிடைக்கிறதா? - கிருமிநாசினிகள் கிடைக்காமல் அலையும் சென்னை மக்கள்! நமது பொது ஜனங்களின் கவலை இந்த விளம்பரத்தை எப்படி நிறுத்துவது என்பதுதான். ஆகவே பலரும் இந்த ஆப்ஷனை இந்த விளம்பரத்தை எப்படி நிறுத்தலாம் என முயற்சித்து வருகிறார்கள்.