பிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..!

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சில மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். வீடியோக்கள், புகைப்படங்கள் பகிர, தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்...

பிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..!
வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சில மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என அந்நிறுவனமே தெரிவித்துள்ளது. இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் செயலி வாட்ஸ்அப். வீடியோக்கள், புகைப்படங்கள் பகிர, தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்டவையும் வாட்ஸ் அப் செயலியில் உள்ளன. நாளுக்கு நாள் வாட்ஸ்அப் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே போவதால் அதனை மேம்படுத்தும் பணிகளிலும் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், சில மாடல் போன்களில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. இதேபோல் ஐபோன்களில் iOS8 மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது. இதுமட்டுமில்லாமல் விண்டோஸ் போன்களிலும் வாட்ஸ்அப் சேவை செயல்படாது. வாட்ஸ்அப் சேவையை மேம்படுத்தி நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை கொடுத்து வரும் வாட்ஸ் அப் நிறுவனம், பழைய மாடல் போன்களில் வாட்ஸ்அப் சேவையை நிறுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.