பேஸ்புக்கில் தரப்பட்டுள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா?

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றது. இதற்கிணங்க தற்போது Lock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இவ் வசதியின் ஊடாக ஒருவர் தனது பேஸ்புக் போஸ்ட்களை நண்பர்களுக்கு...

பேஸ்புக்கில் தரப்பட்டுள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா?

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றது. இதற்கிணங்க தற்போது Lock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இவ் வசதியின் ஊடாக ஒருவர் தனது பேஸ்புக் போஸ்ட்களை நண்பர்களுக்கு மாத்திரம் காண்பிக்கக்கூடிய வகையில் ஒரே நேரத்தில் மாற்றியமைக்க முடியும். பிரத்தியேகமாக இவ் வசதியானது பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் வசதியினைப் பெறுவதற்கு பேஸ்புக்கில் உங்கள் பெயரின் கீழாக உள்ள More என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் Lock Profile என்பதை கிளிக் செய்து மீண்டும் Lock Your Profile என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறெனினும் இவ் வசதியானது தற்போது இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.