பூரி, சப்பாத்திக்கு ஏற்ற காம்போ... பஞ்சாபி சென்னா மசாலா செய்முறை இதோ!

2 months ago 86

பூரி, சப்பாத்தி உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பஞ்சாபி சென்னா மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

By: சசிகலா | Updated at : 26 Dec 2023 03:20 PM (IST)

punjabi chana masala recipe poori chappati side dish recipe பூரி, சப்பாத்திக்கு ஏற்ற காம்போ... பஞ்சாபி சென்னா மசாலா செய்முறை இதோ!

பஞ்சாபி சென்னா மசாலா

தேவையான பொருட்கள் 

வேக வைக்க 

கொண்டைக்கடலை – 2 கப்

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

பஞ்சாபி சன்னா மசாலா செய்ய

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது

தக்காளி – 2 பொடியாக நறுக்கியது

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 கீறியது

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒன்றரை ஸ்பூன்

ஆம்சூர் பவுடர்(மாங்காய் பொடி) – 2 ஸ்பூன்

கசூரி மேத்தி – ஒரு ஸ்பூன்

நெய் – 2 ஸ்பூன் (விரும்பினால்)

செய்முறை

குக்கரில் ஊறவைத்த கொண்டக்கடலை, தண்ணீர், உப்பு, பிரியாணி இலை, பட்டை, பேக்கிங் சோடா சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்.

பின் குக்கரை திறந்து பிரியாணி இலை, பட்டை இவற்றை எடுத்துவிட்டு மற்றதை தனியாக வைக்கவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு,பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் கீறிய பச்சை மிளகாய், மிளகாய் தூள்,மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், அம்சூர் பவுடர்( மாங்காய் பொடி) சேர்த்து கலந்துவிடவேண்டும்.

இப்போது வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்து விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். 

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு  கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிட வேண்டும்.

கடைசியாக கசூரி மேத்தி, நெய் சேர்த்து கலந்து விட்டு இறக்க வேண்டும்.

Published at : 26 Dec 2023 03:20 PM (IST) Tags: chappati side dish punjabi chana masala poori side dish chana masala procedure