முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை: கொரோனா அச்சத்தால் உச்சநீதிமன்றம் முடிவு

  கொரோனா எதிரொலியாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு தற்போது வரை 127 நாடுகளுக்கு...

முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை: கொரோனா அச்சத்தால் உச்சநீதிமன்றம் முடிவு
  கொரோனா எதிரொலியாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அச்சுருத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு தற்போது வரை 127 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் தற்போது வரை இந்த வைரஸ் பாதிப்பிற்கு 3000 த்துக்கும் மேற்ப்பட்டோர் உயிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன இந்தியாவை பொறுத்தவரை தற்போது 85 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமால் இருக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 24 மணிநேர கொரோனா விழிப்புணர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, அண்மையில் தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உறியடி ஹீரோவை வைத்து படம் இயக்கும் போஸ் வெங்கட்...! கொரோனா அச்சம் : 24 விமானங்களின் சேவை சென்னையில் ரத்து இந்நிலையில், கொரோனா எதிரொலியாக சுகாதாரதுறையின் அறிவுறுத்தலின் படி, உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.