முடங்கியது வாட்ஸ் அப் - போட்டோ, வீடியோக்கள் அனுப்ப முடியாத நிலை..!

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாட்ஸ் அப் முடங்கியதால் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உட்பட உலகின் பெரும் தகவல் தொடர்பு செயலியாக இருப்பது வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி...

முடங்கியது வாட்ஸ் அப் - போட்டோ, வீடியோக்கள் அனுப்ப முடியாத நிலை..!
உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாட்ஸ் அப் முடங்கியதால் புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உட்பட உலகின் பெரும் தகவல் தொடர்பு செயலியாக இருப்பது வாட்ஸ் அப். இந்த வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலி தற்காலிகமாக முடங்கியிருக்கிறது. இதனால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த முடக்கம் எதனால் ஏற்பட்டது என அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ஹேக்கர்களின் கைவரிசையா ? என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அவ்வாறு இருப்பின் பலரது வாட்ஸ் அப் செயலிகளும் கண்காணிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்