மூன்று புதிய கார்களை களம் இறக்கும் ஜீப் இந்தியா நிறுவனம்

இந்தியாவில் புனே நகருக்கு அருகே உள்ள ஜீப் இந்தியா நிறுவனத்தின் ரஞ்சங்கவுன் தொழிற்சாலையில் தற்சமயம் காம்பஸ் எஸ்யூவி ரக கார் மாடல் மட்டும்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்சமயம் காம்பஸ் மாடலின் 7 சீட்டர் வெர்சன் காரை தயாரிக்கும் பணியில்...

மூன்று புதிய கார்களை களம் இறக்கும் ஜீப் இந்தியா நிறுவனம்

இந்தியாவில் புனே நகருக்கு அருகே உள்ள ஜீப் இந்தியா நிறுவனத்தின் ரஞ்சங்கவுன் தொழிற்சாலையில் தற்சமயம் காம்பஸ் எஸ்யூவி ரக கார் மாடல் மட்டும்தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்சமயம் காம்பஸ் மாடலின் 7 சீட்டர் வெர்சன் காரை தயாரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. காம்பஸ் மாடலின் பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 7 சீட்டர் மாடலுக்கு டி-எஸ்யூவி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 7 சீட்டர் கார், இந்திய சந்தையில் அடுத்த வருடம் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே பிளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்டதால் காம்பஸ் மாடலின் பெரும்பான்மையான பாகங்களை இந்த 7 சீட்டர் கார் அப்படியே கொண்டுள்ளது. இருப்பினும், இப்புதிய 7 சீட்டர் கார், உயர் ரகத்தில் விலையை பெற உள்ளதால், உட்புறத்தில் பிரீமியம் தொழில்நுட்பங்களாக வழங்க ஜீப் நிறுவனம் முயற்சிக்கிறது.ஜீப் நிறுவனத்தின் இப்புதிய கார் ஆப்-ரோடுக்கு ஏற்ற காம்பஸ் மாடலாக விளங்க உள்ளது. இது, ஹோண்டா சிஆர்-வி, போக்ஸ்வேகன் டைகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா பார்ச்சூனர், போர்டு எண்டேவர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், காம்பஸ் மாடலின் புதிய பேஸ்லிப்ட் வெர்சனையும் இந்திய சந்தைக்கு கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே காம்பஸ் மாடல் பிஎஸ்6 இன்ஜின் தேர்வுகளை பெற்றுவிட்டதால், புதிய ஸ்டைலான வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்களை இப்புதிய பேஸ்லிப்ட் காரில் எதிர்பார்க்கலாம். கடந்த சில மாதங்களாக இந்த பேஸ்லிப்ட் கார், சோதனை ஓட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.வெளிப்புற பேனல்களில் உலோக மாற்றங்களை ஏற்றுள்ள இப்புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் உட்புறத்திலும் சில திருத்தியமைக்கப்பட்ட பாகங்களை பெற்றுள்ளது. மேலும், இதன் டேஸ்போர்டின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. ஜீப் நிறுவனத்தின் முன்னோடி நிறுவனமான எப்சிஏ-வின் லேட்டஸ்ட் யூ கனெக்ட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் இந்த பேஸ்லிப்ட் வெர்சன் கார் பெற உள்ளது. இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் முதன்முதலாக கடந்த ஆண்டில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த லேட்டஸ்ட் சிஸ்டம், 12.3 அங்குல திரையுடன் அதிகளவிலான வசதிகளை தன்னுள் கொண்டுள்ளது. புதுமையான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள ஜீப் நிறுவனத்தின் இந்த காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை இரண்டையும் தவிர்த்து, மூன்றாவதாக சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஒன்றும் ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து வெளிவர உள்ளது. இப்புதிய சப்-4 மீட்டர் காரின் இந்திய அறிமுகம் எப்படியிருந்தாலும் 2021-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு பிறகுதான் இருக்கும் என்கிறார்கள்.