மனைவி மீது சந்தேகம்: கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்

நாமக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர், மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள பெரியபட்டி கதிர்வேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தன்(60). லாரி டிரைவரான இவர் முதல் மனைவி இறந்தநிலையில்...

மனைவி மீது சந்தேகம்: கட்டையால் தாக்கி கொலை செய்த கணவர்
நாமக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர், மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்துள்ள பெரியபட்டி கதிர்வேல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தன்(60). லாரி டிரைவரான இவர் முதல் மனைவி இறந்தநிலையில் மயிலாத்தாள்(49) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பரமானந்தனுக்கும் மயிலாத்தாவிற்கும்இடையே அவ்வபோது குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. சென்னையில் நடிகை வீட்டில் நகைகள் திருட்டு... கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? இந்நிலையில் நேற்றிரவு கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரமானந்தன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மயிலாத்தாளை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மயிலாத்தாளின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், மயிலாத்தாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். உணவு டெலிவரி செய்வதுபோல நோட்டமிட்டு கொள்ளை; 50 கேமராக்களை ஆய்வு செய்து மடக்கிய போலீஸ் ஆனால் சிகிச்சைப்பலனின்றி மயிலாத்தாள் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பரமானந்தனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே கட்டையால் தாக்கியதாக பரமானந்தன் கூறியுள்ளார்.