“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” - நடிகர் வடிவேல்

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலக...

“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” - நடிகர் வடிவேல்
ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்தேன். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. வரும்போது பார்த்துக் கொள்ளலாமே. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது” என்றார். “உங்களுக்கு நம்பிக்கை அளிக்கவே இதனை சொல்கிறேன்”: கொரோனாவிலிருந்து மீண்ட அமெரிக்க பெண் மேலும், தான் முதலமைச்சராகலாம் என நினைத்துள்ளேன் எனவும் அதை சிலர் கெடுக்க பார்ப்பதாகவும் நகைச்சுவையாக தெரிவித்தார். தான் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்கள் தானே என்று கேட்ட வடிவேல், அப்படியென்றால் நான் தான் முதலமைச்சர் என தனக்குரிய காமெடி பாணியில் சொன்னார். கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு..! சோதனையில் உறுதியானது நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மக்கள் மற்றும் இளைஞர்களிடம் எழுச்சி தெரிந்த பிறகே அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார். அப்படியே கட்சித் தொடங்கினாலும், தனக்கு முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.