வேலூரில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி ? : தீவிர கண்காணிப்பில் சிகிச்சை

வேலூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் இருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி (18) மற்றும் 33 வயதுடைய ஆண் ஆகிய 2 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்...

வேலூரில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி ? : தீவிர கண்காணிப்பில் சிகிச்சை
வேலூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் இருவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி (18) மற்றும் 33 வயதுடைய ஆண் ஆகிய 2 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தனி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவின் சகோதரி கடந்த சனிக்கிழமை ஜெர்மனியில் இருந்து வந்ததால், அவரை சென்று சந்தித்த மருத்துவ மாணவிக்கு வைரஸ் பரவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதேபோல் 33 வயது ஆணும் 15 நாட்களுக்கு முன்பு தென்கொரியாவில் இருந்து வந்துள்ளதால் அவருக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே தங்களுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் தாமாக முன்வந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரிசோதித்துள்ளனர். அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் அடிப்படையில் கொரோனா அறிகுறி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது தீவிர கண்காணிப்பில் அவர்கள் இருப்பதாக வேலூர் மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவா? கொள்ளையர்களா? - துப்பாக்கியை வாங்க கடைகளில் குவியும் அமெரிக்கர்கள்!!