வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத சடலம் : பெண்ணா ? திருநங்கையா ? என விசாரணை

வேலூர் கோட்டை அகழியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கோட்டைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா எதிரொலியால் வருகை தடை...

வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத சடலம் : பெண்ணா ? திருநங்கையா ? என விசாரணை
வேலூர் கோட்டை அகழியில் மிதந்த அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கோட்டைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா எதிரொலியால் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை அகழியில் அடையாளம் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை அகழிக்கு சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத சடலத்தை கைப்பற்றினர். பின்னர் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக மீட்கப்பட்ட உடல் சுடிதார் மற்றும் பெண்கள் அணியும் பேண்ட் உடுத்திருந்ததால், அது பெண்ணா ? அல்லது திருநங்கையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அகழியில் குதித்து தற்கொலையா ? அல்லது கொலை செய்யப்பட்டு அகழியில் வீசப்பட்டரா ? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. பதவி ஆசைக்காக தன்னை தானே வெட்டிக்கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி