விவசாய தோட்டத்திற்குள் இரவில் புகுந்த சிறுத்தை : சிதறிய ஆடுகளில் ஒன்று பலி

சத்தியமங்கலம் அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்துக்கொன்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிக்கனப்பா....

விவசாய தோட்டத்திற்குள் இரவில் புகுந்த சிறுத்தை : சிதறிய ஆடுகளில் ஒன்று பலி
சத்தியமங்கலம் அருகே விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்துக்கொன்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிக்கனப்பா. வனப்பகுதியை ஒட்டி இவரது விவசாய தோட்டம் உள்ளது. இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்த நிலையில், நேற்று மாலை வழக்கம்போல ஆடுகளை பட்டியில் அடைத்தார். இன்று காலை பட்டியில் சென்று பார்த்துபோது ஒரு ஆடு கழுத்தில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து கூடிய அப்பகுதி விவசாயிகள் ஆடு இறந்திருப்பதைக் கண்டு சிறுத்தை கடித்திருக்கலாம் என கணித்தனர். பின்னர் ஜூரகள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து சிறுத்தை கடித்து ஆடு இறந்ததை உறுதி செய்தனர். அத்துடன் விவசாயிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். தங்கள் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் இருப்பதால் அதனை உடனே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கால்நடைகள் மற்றும் குழந்தைகளுடன் இருப்பது அச்சமளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா கண்காணிப்பிலிருந்து தப்பித்து விபத்தில் சிக்கிய நபர்.. உதவிய 40 பேருக்கு பாதிப்பு?