144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில் எளிமையாக நடைபெற்று முடிந்த திருமணம்

144 தடை உத்தரவால் விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் ஒன்று மிகவும் எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும்...

144 தடை உத்தரவால் 10 நிமிடங்களில் எளிமையாக நடைபெற்று முடிந்த திருமணம்
144 தடை உத்தரவால் விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் ஒன்று மிகவும் எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 20 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. குஜராத் : கொரோனா பாதித்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு   ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி : அச்சமடைந்த ஒட்டன்சத்திரம் மக்கள்..!அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிச்சயம் செய்யப்பட்ட, முரளிதரன்- மீனா  புதுமணத் தம்பதிக்கு இடையேயான திருமணம் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களது திருமணம் இன்று திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோயில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு மொத்தமே பத்து நிமிடங்கள்தான் வழங்கப்பட்டது. மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தரப்பில் இருந்து தலா 4 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.